Breaking News

விளாத்திகுளம் பகுதியில் வருகின்ற 28-ம் தேதி கனிமொழி எம்.பி.-யின் மக்கள் களம் நிகழ்ச்சி!

  • Share on

விளாத்திகுளம் பகுதியில் வருகின்ற 28-ம் தேதி கனிமொழி எம்.பி.-யின் மக்கள் களம் நிகழ்ச்சி! இது தொடர்பாக அமைச்சர் கீதாஜீவன் வெளியிட்டுள்ள அறிக்கையில், திராவிட முன்னேற்றக் கழக துணைப் பொதுச் செயலாளரும், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கருணாநிதி, தமிழக சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சரும், தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க செயலாளருமான கீதாஜீவன் ஆகியோர் வருகிற அக்டோபர் 28-ம் தேதி சனிக்கிழமையன்று விளாத்திகுளம் பகுதியில் மக்கள் களம் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்கள். இதன்படி, மாலை 4 மணிக்கு சிவஞானபுரம் கிராமத்திலும், மாலை 5 மணிக்கு சக்கம்மாள்புரம் ஊராட்சி பொம்மையாபுரம் கிராமத்திலும், மாலை 6 மணிக்கு  நமச்சிவாயபுரம் கிராமத்திலும், இரவு 7 மணிக்கு  அருங்குளம் கிராமத்திலும், 8 மணிக்கு வெள்ளையம்மாள்புரம்  ஆகிய பகுதிகளில் மக்களை சந்தித்து குறைகளை கேட்கிறார்கள். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது...

உங்கள் கருத்தை பதிவிடுக

Comments Added Successfully!

  • Share on

ஜாதி வாரி கணக்கெடுப்பு தமிழக அரசு நடத்த வேண்டும்: அன்புமணி ராமதாஸ் பேட்டி!

"100 நாள் வேலை திட்டத்தில், நம்மளோட பங்கு பணம் கொடுத்தாச்சு...மத்திய அரசுதான் கொடுக்கல.." - கனிமொழி எம்.பி. குற்றச்சாட்டு!

  • Share on