டெல்லி செங்கோட்டையில் அதிமுக கொடி பறக்கும் - விளாத்திகுளம் அருகே முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ பேச்சு!தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள எட்டயபுரம் மற்றும் குறுக்குச்சாலையில், தனியார் திருமண மண்டபத்தில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பூத் கமிட்டி உறுப்பினர்களுக்கு சிறப்பு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சரும், கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு பூத் கமிட்டி மற்றும் கட்சியினரிடையே ஆலோசனைகள் வழங்கி சிறப்புரையாற்றினார். அப்போது பேசுகையில்,
• சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் இருந்து புறப்படும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் டெல்லி செங்கோட்டை வரை சென்று அங்கு தான் நிற்கும், டெல்லி செங்கோட்டையில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழக கொடி பறக்கும்... அந்த ட்ரெயினில் ஏறியவர்கள் புத்திசாலி...
• திமுகவுடன் இருக்கும் கட்சியில் பிரிந்து வந்தாலும் சரி... மற்ற கட்சிகளும் சேர்ந்துவிட்டால் அவர்களுக்கு நன்மை, சேருகின்ற காலம் விரைவில் வரும்... மெகா கூட்டணியை எடப்பாடியார் அமைப்பார்...
• யாராவது கட்சிகூட வந்து கூட்டணி சேர்ந்து கிட்டால் அவங்களுக்கு நல்லது... இன்னும் காலம் கெட்டுப்போகல, காலம் இருக்கு...."பூவோடு சேர்ந்த நாரும் மணக்கும்"-என்பதை போல நம்மோடு சேரும் அவர்களுக்கும் கொஞ்சம் வெற்றி கிடைக்கும்... • "ஊர் வாயில் விழுந்த பிறகு உருப்படவே மாட்டார்கள்", இந்த ஆட்சி கண்டிப்பாக ஓடாது... விரைவில் சட்டமன்ற தேர்தல் வந்துவிடும் எனப் பேசினார்..



உங்கள் கருத்தை பதிவிடுக