விளாத்திகுளம் அருகே உள்ள குளத்தூரில் அகில இந்திய அளவிலான ஆண், பெண் கபடி போட்டியில் சென்னை ஐசிஎப், ஒட்டன்சத்திரம் எஸ்எம்விகேசி அணிகள் முதலிடம்.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள குளத்தூர் இந்து நாடார் உறவின்முறைச் சங்கத்திற்கு பாத்தியப்பட்ட ஸ்ரீபத்திரகாளியம்மன் கோயில் ஆனித்திருவிழா மற்றும் காமராஜர் பிறந்தநாளையட்டி குளத்தூர் ஜாலிப்ரண்ட்ஸ் கபடி குழுவினர் நடத்தும் 59ம்ஆண்டு தென்னிந்திய அளவிலான ஆண், பெண் கபடி போட்டிகள் கடந்த ஜுலை 13ல் துவங்கி 14,15 ஆகிய தேதிகளில் மூன்று நாட்கள் தொடர்ந்து நடந்தது.
ஆண்கள் பிரிவில் ஆர்எப்டபுள்யூ பெங்களூர், கேரளா, ஐசிஎப் சென்னை, இன்கம்டாக்ஸ் சென்னை, பேங்காப் பரோடா, சாய் சென்னை, அலத்தங்கரை, கற்பகம் யுனிவர்சிட்டி, துரைசிங்கம் தூத்துக்குடி, பெண்கள் பிரிவில் சித்தூர், கபடி ஸ்டார் சென்னை, ஒட்டன்சத்திரம் எஸ்எம்வீகேசி, கோவை பிகேஆர், அந்தியூர் சக்திபிரதர்ஸ் ஆகிய அணிகள் கலந்து கொண்டு விளையாடியது. லீக்போட்டிகளாக நடத்தப்பட்ட இப்போட்டிகளில் வெற்றி பெற்ற அணிகள் இறுதி போட்டிகளில் விளையாடியது.
இதில் முதல் இடம் பிடித்த சென்னை ஐசிப் அணிக்கு முதல் பரிசு ரூ 1.20லட்சம் மற்றும் காமராஜர் நினைவு சுழற்கோப்பை வழங்கப்பட்டது. இரண்டாமிடம் பிடித்த சென்னை இன்கம்டாக்ஸ் அணிக்கு ரூ 70ஆயிரம் கோப்பை வழங்கினர். மூன்றாமிடம் பிடித்த பாங்காப் பரோடா மற்றும் துரைசிங்கம் அணிகளுக்கு தலா ரூ40 ஆயிரம் வழங்கினர். பெண்கள் பிரிவில் முதலிடம் ஒட்டன்சத்திரம் எஸ்எம்வீகேசி அணிக்கு ரூ50ஆயிரம் மற்றும் கோப்பை வழங்கினர். இரண்டாமிடம் பிடித்த பிகேஆர் கல்லூரி அணிக்கு ரூ30ஆயிரம் மற்றும் கோப்பை வழங்கினர். மூன்றாமிடம் பிடித்த சித்தூர், அந்தியூர் அணிக்கு தலா ரூ15ஆயிரம் வழங்கினர். தொடர்ந்து சிறந்த ரைடர், கேச்சர்களுக்கான சிறப்பு பரிசுகள் வழங்கினர்.
குளத்தூர் பெருந்தலைவர் காமராஜர் நற்பணி மன்ற நிர்வாகி அந்தோணி ஆசிரியர் நன்றி கூறினார். போட்டிகளுக்கான ஏற்பாடுகளை ஜாலிப்ரண்ட்ஸ் கபடி குழுவினர் செய்திருந்தனர்.




உங்கள் கருத்தை பதிவிடுக