Breaking News

14-க்கும் மேற்பட்ட சமுதாயங்கள் இணைந்து நடத்தும் கோவில் திருவிழா! : விரதம் இருந்த பக்தர்களின் தீர்த்த ஊர்வலம்!

  • Share on

விளாத்திகுளம் அருகே 14-க்கும் மேற்பட்ட சமுதாயங்கள் இணைந்து நடத்தும் கோவில் திருவிழா! : விரதம் இருந்த பக்தர்களின் தீர்த்த ஊர்வலம்!


தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே 14-க்கும் மேற்பட்ட சமுதாயங்கள் இணைந்து பல நூற்றாண்டு காலமாக இணைந்து சமுதாய பாகுபாடின்றி வடக்குவாசெல்வி அம்மன் மற்றும் செல்வவிநாயகர், அடைக்கலம்காத்த அய்யனார் திருக்கோவில் கோவில் கொடை விழா வெகுசிறப்பாக நடைபெற்று வருகிறது.


வடக்குவாசெல்வி அம்மன் கோவிலில் இருந்து மஞ்சள் நீர் குடம் எடுத்து ஊர் கண்மாய்க்கு சென்று பக்தர்களுக்கு அருள் ஏற்றி,அக்னி சட்டி எடுத்து ஊர்வலமாக வந்து வடக்குவா செல்விஅம்மன் கோவில் முதல் அடைக்கலம் காத்த அய்யனார் கோவில் வரை சென்று கோவில் கொடை சிறப்பாக தொடங்கியது.


இந்த நிகழ்வில் சிங்கிலிபட்டி கிராம தர்மகத்தா முத்துக்கண்ணன், கல்குமி கிராம தர்மகத்தா கிருஷ்ணமூர்த்தி, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்ககள் ஆவுடையப்பன், சீத்தாராமன், செல்லக்குமார் மற்றும் ஊர் பொதுமக்கள் பக்தர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

உங்கள் கருத்தை பதிவிடுக

Comments Added Successfully!

  • Share on

பெண்களின் வேளாண்கும்மி மற்றும் மாரிகும்மி கும்மி: கரகம் மற்றும் கோலாட்டத்துடன் நடைபெற்ற பெண்களின் கும்மியாட்டத்தை கண்டு ரசித்த ஏராளமான பொதுமக்கள்!

எட்டயபுரம் அருகே கோர விபத்தில் பெண் பலி...

  • Share on