தேசிய ஜனநாயக கூட்டனிக்கு ஆதரவு பெருகி வருகிறது. அதிமுகவிற்கான வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. தூத்துக்குடி விமான நிலையத்தில் அம்பாசமுத்திரம் அதிமுக வேட்பாளர் இசக்கி சுப்பையா பேட்டி!
தமிழக சட்டமன்றதேர்தலுக்கு அதிமுக சார்பாக நேற்று 2ம் கட்ட வேட்பாளர்களை அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார். அதில் நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் தொகுதி வேட்பாளராக 3 வது முறையாக இசக்கி சுப்பையா அறிவிக்கபட்டார். தொடர்ந்து இன்று விமானம் மூலம் தூத்துக்குடி விமான நிலையம் வருகை தந்த அவர் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது, அவர் கூறுகையில்,
அதிமுக ஆட்சிக்கு வந்த உடன் சட்டம் ஒழுங்கு சீராக இருக்கும், கனிமவள கொள்ளை இருக்காது, எடப்பாடி கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்படும். அதிமுகவிற்கான வெற்றி வாய்பு பிரகாசமாக இருக்கிறது. கடந்த சிலநாட்களாகவே தேசியஜனநாயக கூட்டனிக்காக ஆதரவு பெருகி வருகிறது. தாமிரபரணி தூர்வார 2011ல் நான் வெற்றி பெற்ற போது தாமிரபரணி தூர்வார முயற்சி எடுத்தேன். தற்போது அதற்கான வழக்கு தொடந்துள்ளேன் தீர்ப்பு சாதகமாக வந்ததும் அந்த பணிகள் ஆரம்பிக்கபடும், அதை போன்று பெண்கள் கலை கல்லூரி கொண்டு வர முயற்சி செய்வேன் கடந்த ஆட்சியில் 10 கோரிக்கைகளில் ஒன்றாக பெண்கள் கலை கல்லூரி கேட்டிருந்தேன் என்றார்.




உங்கள் கருத்தை பதிவிடுக