விருதுநகர் மாவட்டம் சாத்தூர் KMT வித்யாலயா (CBSE) பள்ளியின் இரண்டாவது ஆண்டு விழா நிகழ்ச்சி வெகு சிறப்பாக நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட "கில்லி" திரைப்பட நடிகர் தாமு கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது பேசிய நடிகர் தாமு, 20 ஆண்டுகளுக்கு முன்பு கில்லி திரைப்படம் வெளியானது, அந்தப் படத்தில் ஓட்டேரி நரி என்ற கதாபாத்திரத்தில் நான் நகைச்சுவை நடிகராக நடித்துள்ளேன், 20 ஆண்டுகளுக்குப் பின்பு தற்போது ஊரே தற்போது "கில்லி" திரைப்படத்தை கொண்டாடி வருகின்றது, எல்லாத் திரையரங்குகளிலும் 100 கோடிக்கு மேல் வசூல் செய்யப்பட்டுள்ளது, இது எனக்கு மிகவும் சந்தோசமாக இருக்கிறது என்றார். ஆனால் 20 ஆண்டுகளுக்கு முன்பு வந்த சினிமாவை கொண்டாடும் நீங்கள், 20 ஆண்டுகளுக்கு முன்பு வைத்த செடிகள் தற்போது மரமாகி நின்றுள்ளது, அந்த மரத்தையும் இயற்கையையும் கொண்டாடுங்கள் என்று நடிகர் தாமு கூறினார். மேலும் அவர் பேசும் பொழுது பள்ளி நிர்வாகம் இயற்கையை கொண்டாடுங்கள், இயற்கையை நேசியுங்கள் என்று பள்ளி மாணவர்களுக்கு இவ்விழாவில் எடுத்துரைப்பது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது என்றார்.




உங்கள் கருத்தை பதிவிடுக