Breaking News

இளம் தலைமுறை விளையாட்டு வீரர்கள் உறுப்பினர் பதிவு விண்ணப்ப படிவங்களை வழங்கிய முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ!

  • Share on

விளாத்திகுளம் அருகே அதிமுக இளம் தலைமுறை விளையாட்டு வீரர்கள் உறுப்பினர் பதிவு விண்ணப்ப படிவங்களை வழங்கிய முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ!



தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி மேற்கு ஒன்றியத்திற்குட்பட்ட குளத்தூரில், மேற்கு ஒன்றியச் செயலாளர் மகேஷ் தலைமையில் விளாத்திகுளம் மேற்கு ஒன்றியத்திற்கான பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கடம்பூர் ராஜூ, சட்டமன்ற தொகுதிக்கான தேர்தல் பூத் கமிட்டி நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பதற்கான விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் குறித்து கட்சியினருக்கு ஆலோசனை கூறினார். அவ்வாறு பூத் கமிட்டிக்கு தேர்ந்தெடுக்கப்படும் நிர்வாகிகளில் இதுவரை கட்சிப் பொறுப்பு வகிக்காத கட்சியினருக்கும், இளைஞர்களுக்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் இளம் தலைமுறை விளையாட்டு வீரர்கள் பிரிவில் அதிக உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என்று கூறியதோடு கட்சி நிர்வாகிகளுக்கு உறுப்பினர் சேர்க்கை பதிவு விண்ணப்ப படிவங்களை வழங்கினார். குளத்தூரில் நடைபெற்ற இந்த பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டத்தில், விளாத்திகுளம் மேற்கு ஒன்றிய செயலாளர் மகேஷ், விளாத்திகுளம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பன், விளாத்திகுளம் முன்னாள் ஒன்றிய குழுபெரும் தலைவர் முனியசக்தி ராமச்சந்திரன்,குளத்தூர் முன்னாள் ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் மாரி செல்வி பாலமுருகன், விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதி தகவல் தொழில்நுட்ப பிரிவு சுரேஷ் உள்ளிட்ட ஏராளமான அதிமுகவினர் பலர் கலந்து கொண்டனர்.

உங்கள் கருத்தை பதிவிடுக

Comments Added Successfully!

  • Share on

புதிய பயணியர் நிழற்குடை கட்டும் பணியை MLA மார்க்கண்டேயன் துவக்கி வைத்தார்.

நல்லப்ப சுவாமிகள் 61வது நினைவு குருபூஜை இசை விழா!

  • Share on