Breaking News

விளாத்திகுளத்தில் அதிமுகவினருக்கு உறுப்பினர் அட்டைகள் வழங்கிய முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ!

  • Share on

விளாத்திகுளத்தில் அதிமுகவினருக்கு உறுப்பினர் அட்டைகள் வழங்கிய முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ!




தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் தனியார் திருமண மண்டபத்தில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பன் தலைமையில் அதிமுக நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களுக்கு உறுப்பினர் அட்டைகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சரும், கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு கட்சியினரிடையே சிறப்புரையாற்றினார். இதைத்தொடர்ந்து கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு உறுப்பினர் அட்டைகளை வழங்கி தீவிரமாக கட்சிப் பணிகளில் ஈடுபட்டு வரவிருக்கும் உள்ளாட்சி தேர்தல் மற்றும் 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக வெற்றிபெற செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இந்நிகழ்வில் விளாத்திகுளம் மேற்கு ஒன்றிய செயலாளர் மகேஷ், கிழக்கு ஒன்றிய செயலாளர் பால்ராஜ், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் சின்னப்பன், மோகன், என்.கே.பெருமாள், கோவில்பட்டி கவுன்சிலர் கவியரசன்,  விளாத்திகுளம் நகர செயலாளர் மாரிமுத்து, மகளிர் அணி சாந்தி  உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.

உங்கள் கருத்தை பதிவிடுக

Comments Added Successfully!

  • Share on

அருந்ததியர்கள் மீது அக்கறை இல்லாதவர் முதல்வர்...சமூக நீதி என்றால் என்ன அன்புமணி ராமதாஸ் கேள்வி?

அதிமுகவினரை கண்டித்து பாஜகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்.

  • Share on