எட்டையபுரத்தில் பாஜக-வினர் தப்பு தாளங்களுடன் இறுதி கட்ட வாக்கு சேகரிப்பு : 200க்கும் மேற்பட்ட பெண்கள் துண்டு பிரசுரங்களை வழங்கி பிரச்சாரம்!
தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் நாளை 6:00 மணி வரை மட்டுமே அனைத்து கட்சிகளுக்கும் பிரச்சாரம் செய்ய தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கி உள்ளது. இந்த நிலையில் தூத்துக்குடி பாஜக கூட்டணி (தமாகா) வேட்பாளர் விஜய் சீலனுக்கு எட்டையபுரத்தில் பாஜக-வினர் தப்பு தாளங்களுடன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். பிரச்சாரத்தில் ஈடுபட்ட 200க்கும் மேற்பட்ட பெண்கள் வீடு வீடாக சென்று பாஜகவின் தேர்தல் வாக்குறுதிகளைக்கூறியும், துண்டு பிரசுரங்களை வழங்கியும் பாஜக கூட்டணி வேட்பாளர் விஜய் சீலனுக்கு வாக்களிக்க வேண்டும் என்று கை கூப்பி கேட்டு இறுதி கட்ட வாக்கு சேகரிக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டனர். மேலும் எட்டையபுரம் பஜார் பகுதியில் பாஜக நிர்வாகிகள் திமுக அரசையும், முதல்வர் ஸ்டாலினையும் கடுமையாக விமர்சித்து பேசி... பாஜகவின் சாதனைகள் பொதுமக்களுடன் எடுத்துக் கூறி, மீண்டும் பிரதமராக நரேந்திர மோடி வரவேண்டும் என்றால் பாஜக கூட்டணி வேட்பாளர் விஜய சிலனுக்கு "சைக்கிள்" சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என்று தீவிரவாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.



உங்கள் கருத்தை பதிவிடுக