விளாத்திகுளம் அருகே எட்டையாபுரம் 3வது வார்டு ஆர்சி தெருவில் அதிமுக புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள எட்டயபுரத்தில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட அதிமுக செயலாளரும் முன்னாள் அமைச்சரும் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் ராஜுஆலோசனையின்படி எட்டையாபுரம் அதிமுக நகர செயலாளர் ராஜகுமார், எட்டையாபுரம் பேரூராட்சிக்கு உட்பட்ட3வது வார்டு ஆர்சி தெருவில் அதிமுக புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் ஏராளமானோர் அதிமுக உறுப்பினர் சேர்க்கை படிவத்தை பூர்த்தி செய்து தங்களை ஆர்வத்துடன் அதிமுகவில் இணைத்துக் கொண்டனர். இந்த நிகழ்வில் அதிமுக கிளை கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.



உங்கள் கருத்தை பதிவிடுக