விளாத்திகுளம் தனியார் திருமண மண்டபத்தில் அதிமுக சார்பில் பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. தமிழக முழுவதும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் ஆணைக்கிணங்க அதிமுக பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது.
இதன் ஒரு பகுதியாக தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் எட்டையபுரம் சாலையில் உள்ள அதிமுக பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜீ தலைமையில் நடைபெற்றது.கூட்டத்தில் உள்ள நிர்வாகிகளிடம் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜீ கட்சியின் வளர்ச்சிகள் குறித்து ஆலோசனைகள் மற்றும் பூத் படிவங்களையும் வழங்கினார்,இந்நிகழ்வில் ஒன்றிய செயலாளர் மகேஷ், ஒன்றிய குழு பெருந்தலைவர் முனியசக்தி ராமச்சந்திரன், மற்றும் கட்சியின் நிர்வாகிகள் தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.



உங்கள் கருத்தை பதிவிடுக