சீனலைட்டரை தடை செய்யக்கோரி நிர்மலா சீதாராமனிடம் மனு அளித்த கோவில்பட்டி தீப்பெட்டி உரிமையாளர் சங்கத்தினர்!
மத்திய தொழில்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களை நேரில் சந்தித்து சைனாவில் இருந்து வரக்கூடிய சீனபிளாஸ்டிக் சிகரெட் லைட்டர் மற்றும் உதிரி பாகங்களை இந்தியா முழுவதும் விற்பனை செய்வதற்கு தடை விதிக்க வேண்டும் என, தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நேஷனல் சிறு தீப்பெட்டி உற்பத்தியாளர் சார்பில் கோரிக்கை மனு வழங்கப்பட்டுள்ளது. பிஜேபி கட்சியின் மாநில பொதுச் செயலாளர் பேராசிரியர். ராமசீனிவாசன் தலைமையில் நேஷனல் சிறு தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்கம் தலைவர் எம். பரமசிவம் துணைத் தலைவர் ஆர் கோபால்சாமி, சாத்தூர் சங்கத் தலைவர் செ. லட்சுமணன் நிர்வாக குழு உறுப்பினர் பேராசிரியர் கணேஷ் ராம் ஆகியோர் கலந்து கொண்டு தொழில் நிலவரம் குறித்து எடுத்துக் கூறி சீனபிளாஸ்டிக் லைட்டரை தடை செய்யவேண்டி மனு அளித்தனர்.




உங்கள் கருத்தை பதிவிடுக