Breaking News

எல்லை தாண்டி மீன்பிடித்த சிங்கள மீனவர்கள் 7 பேர் கைது: மீன்பிடி தடைகாலத்தை பயன்படுத்தி சிங்கள மீனவர்கள் மீன் வேட்டை!

  • Share on

எல்லை தாண்டி மீன்பிடித்த சிங்கள மீனவர்கள் 7 பேர் கைது: மீன்பிடி தடைகாலத்தை பயன்படுத்தி சிங்கள மீனவர்கள் மீன் வேட்டை!

தமிழக முழுவதும் கடந்த ஏப்ரல் 15  முதல் ஜூன் 15 தேதி வரை மீன்பிடி தடைக்காலம் அமலில் உள்ளது, இந்நிலையில் இந்திய கடலோர காவல் படைக்கு சொந்தமான வைபவ் ரோந்து கப்பல் மூலம் இந்திய கடலோர எல்லைப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தது, அப்போது கன்னியாகுமரி கடல் பகுதியில் இருந்து சுமார் 70 நாட்டிகள் மைல் தொலைவில் இலங்கையை சேர்ந்த விசைப்படகு ஒன்று மீன் பிடித்துக் கொண்டிருப்பது தெரியவந்தது, இதனை அடுத்து விசைப்படகை சுற்றி வளைத்த இந்திய கடலோரக் காவல் படையினர், படகில் இருந்த  இலங்கை அம்பல கொடை பகுதியை சேர்ந்த  சிங்கள மீனவர்களான சேர்ந்ததாரகா அமிலகுமார்,புஷ்பகுமார், மியாந்த சில்வாஇண்டிகர்,சுஷாந்தர் ஊபாளி நிரங்கன் என்பது தெரிய வந்தது, இவர்கள் தற்போது தமிழகத்தில் மீன் பிடித்தடைகாலம் உள்ள நிலையில், இந்திய கடல் எல்லைப் பகுதிகளில் அத்து மீறி  மீன்பிடிப்பில் ஈடுபட்டது தெரிய வந்தது,மேலும் அவர்கள் 13 டன் சூறை மீன்களை பிடித்து பதப்படுத்தி வைத்திருந்ததும் தெரிய வந்தது, இதைத்தொடர்ந்து கைது செய்யப்பட்ட மீனவர்களிடம் அவர்கள் மீன்பிடிக்க வந்தார்களா? அல்லது போதைப் பொருள் கடத்தல் அல்லது வேறு ஏதேனும் சட்டவிரோத செயல்களில் ஈடுபட வந்தார்களா? என பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிரவிசாரணை மேற்கொண்டனர். மேலும் விசைப்படகில் வேறேனும் பொருட்கள் இருக்கிறதா என கடலோர  பாதுகாப்பு  குழும போலீசார் சோதனை செய்தனர். இதனைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட 7 சிங்கள மீனவர்களையும், விசைப்படகும் தூத்துக்குடி- தருவைகுளம் மீன்பிடி துறைமுகத்திற்கு கொண்டு வந்தனர். தருவைக்குளம் கொண்டுவரப்பட்ட சிங்கள மீனவர்களிடம் Q பிரிவு போலீசார், மீன்வளத் துறையினர் சுங்க இலக்காவினர் மற்றும் மத்திய உளவுத்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கைது செய்யப்பட்ட சிங்கள மீனவர்களை  ராமநாதபுரம் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்திய பின் சென்னை ஊழல் சிறையில் அடைக்க உள்ளதாக இந்திய கடலோர பாதுகாப்பு குழும போலீசார் தெரிவித்துள்ளனர்.

உங்கள் கருத்தை பதிவிடுக

Comments Added Successfully!

  • Share on

ரூ.20 லட்சம் மதிப்புள்ள 1300 கிலோ பீடி இலைகள் பறிமுதல்!

வயநாடு பகுதியில் நிலச்சரிவில் உயிரிழந்த குடும்பத்தினருக்கு கனிமொழி MP தனது X பக்கத்தில் ஆறுதல்!

  • Share on