Breaking News

கடலில் நீந்தி சாதிக்க நினைத்த முதியவர் நடுக்கடலில் உயிரிழப்பு!

  • Share on

இலங்கை தலைமன்னார் முதல் தனுஷ்கோடி அரிச்சல்முனை வரை தொடர் ஓட்ட முறையில் நீந்தி கடக்க முயன்ற பெங்களூருவைச் சேர்ந்த முதியவர் நடுக்கடலில் நெஞ்சு வலி காரணமாக உயிரிழந்துள்ளார்.

இலங்கை தலைமன்னார் முதல் தனுஷ்கோடி வரை உள்ள 30 கிலோமீட்டர் தூரம் பாக் ஜலசந்தி கடல் பகுதியை சமீப காலமாக வெளியூர் மற்றும் வெளிமாநிலங்களை சேர்ந்த பல நீச்சல் வீரர்கள் நீந்தி கடந்து சாதனை படைத்து வருகின்றனர். இந்தநிலையில்  இலங்கை: தலைமன்னார் முதல் இந்தியா: தனுஷ்கோடி அரிச்சல் முனை வரை நீந்தி கடப்பதற்கு இந்திய இலங்கை இருநாட்டு அரசிடம் உரிய அனுமதி பெற்று நேற்று 31 பேர் கொண்ட குழு இராமேஸ்வரத்தில் இருந்து படகுமூலம் புறப்பட்டு தலைமன்னார் பகுதிக்கு சென்றடைந்தனர். பின் அங்கிருந்து இன்று காலை சுமார் 12.10 மணி அளவில் கடலில் குதித்து தொடர் ஓட்டம் முறையில் நீந்த  தொடங்கினர். அப்போது சரியாக மூன்று மணி அளவில் தொடர் ஓட்ட நீந்துதலில் மூன்றாவது இடத்தில் இருந்த பெங்களூரை சேர்ந்த கோபால் ராவ் (78) என்பவருக்கு திடீரென நடுக்கடலில் நெஞ்சுவலி ஏற்பட்டது. இதனையடுத்து அவரை பரிசோதித்த மருத்துவக் குழு நெஞ்சு வலி காரணமாக கோபால் ராவ் உயிரிழந்ததை உறுதிப்படுத்தினர் .

இதனையடுத்து கோபால் ராவ் உடலை தனுஷ்கோடி பாலம் மீன்பிடித் துறைமுகத்திற்கு எடுத்து வந்த பின்னர் உடற்கூறு ஆய்வுக்காக இராமேஸ்வரம் அரசு மருத்துவமனைக்கு  கொண்டு சென்றனர். இதையடுத்து உடன் வந்த நபர் ஒருவர் உயிரிழந்ததால் 30 பேரும் தலைமன்னார் முதல் தனுஷ்கோடி அரிச்சல் முனை வரை நீந்தி கடந்து சாதனை படைக்கும் நிகழ்வை கைவிட்டனர். மேலும் கோபால் ராவ் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக இராமேஸ்வரம் மரைன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

உங்கள் கருத்தை பதிவிடுக

Comments Added Successfully!

  • Share on

இலங்கை தமிழர் முகாமில் 40 குடியிருப்புகளை கனிமொழி எம்.பி. திறந்து வைத்தார்.

ரூ.20 லட்சம் மதிப்புள்ள 1300 கிலோ பீடி இலைகள் பறிமுதல்!

  • Share on