விளாத்திகுளம் அருகே உள்ள தருவைகுளம் பகுதியை சேர்ந்த மீனவர்கள் 12-பேரை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக மாலதீவு கடற்படையினர்
சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களையும் படகுகளையும் மீட்டு தருவதாக கனிமொழி எம்பி உறுதி!
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம்
அருகே உள்ள தருவைகுளம் பகுதியை சேர்ந்த மீனவர்கள் 12-பேரை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக மாலதீவு
கடற்படையினர் கைது செய்துள்ள நிலையில் கைது செய்யப்பட்ட மீனவர்களின்
குடும்பத்தினரை நேற்று நேரில் சந்தித்த திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி எம்பி
கைது செய்யப்பட்ட மீனவர்களையும் மீன்பிடி படகையும் மீட்டு தருவதாக உறுதியளித்தார்.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம்
அருகே உள்ள தருவைகுளம் பகுதியில் இருந்து மைக்கேல் பாக்கியராஜ் என்பவருக்கு
சொந்தமான விசைப்படகில் கடந்த 1-ம் தேதி
மீன் பிடிக்க சென்ற தருவைகுளம்,வேம்பார்,இராமெஸ்வரம்
பகுதிகளை சேர்ந்த பரலோக திரவியம், அந்தோணி கிறிஸ்டோபர் ,உதயகுமார், மைக்கேல் ராஜ் ,மணி, சக்தி செல்வராஜ் ,விக்னேஷ் ,ஆதிநாராயணன், மாதேஷ் குமார் 12-மீனவர்களை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக
மாலத்தீவு கடற்படையினர் படகினை பறிமுதல் செய்து 12-மீனவர்களை
கைது செய்தனர் இந்த சம்பவம் தொடர்பாக அறிந்த திமுக நாடாளுமன்ற உறுப்பினர்
கனிமொழி எம்பி உடனடியாக மத்திய அரசுக்கு கைது செய்யப்பட்ட 12-மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்
என கடிதம் எழுதினார் இதனை தொடர்ந்து தருவைகுளம் பகுதிக்கு நேரில் சென்ற திமுக
நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கைது செய்யப்பட்ட மீனவர்களின் குடும்பத்தினரை
நேரில் சந்தித்து கைது செய்யப்பட்டவர்களையும் படகையும் மீட்டு தருவதாக உறுதியளித்தார்
மேலும் தருவைகுளம் பகுதியில் இருந்து மாலதீவு
சென்றுள்ள தமிழ்நாடு ஆழ்கடல் விசைபடகு மீனவர் சங்க தலைவர் அந்தோணி ஜெயபாலன்
என்பவரிடம் தொலைபேசியில் தொடர்புகொண்டு அங்குள்ள சூழ்நிலை குறித்து கனிமொழி எம்பி கேட்டறிந்தார்.தமிழக மீனவர்கள்
தொடர்ந்து சிறைபிடிக்கப்படுவது தற்போது வாடிக்கையாக்கி வருவது
குறிப்பிடத்தக்கதாகும்.




உங்கள் கருத்தை பதிவிடுக