Breaking News

வீர மரணம் அடைந்த காவலர்களுக்கு துப்பாக்கி குண்டுகள் முழங்க மரியாதை!

  • Share on

காவல்துறையில் வீரமரணமடைந்த காவலர்களின் தியாகத்தை நினைவு கூறும் வகையில் தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையத்தில் இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் அவர்கள் தலைமையில் காவலர் வீர வணக்க நாள்உறுதிமொழி ஏற்று துப்பாக்கி குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தப்பட்டது.1959ம் ஆண்டு அக்டோபர் 21ம் தேதி லடாக் பகுதியில் ஹாட் ஸ்பிரிங்ஸ்என்ற இடத்தில் சீன இராணுவத்தினர் ஒளிந்திருந்து மேற்கொண்ட திடீர் தாக்குதலில் 10 மத்திய பாதுகாப்பு படை (CRPF) காவலர்கள் உயிரிழந்தனர். கடல் மட்டத்திலிருந்து பதினாராயிரம் அடி உயரத்தில் அன்று வீர மரணமடைந்த காவலர்களின் தியாகத்தை கடல் அலைகள் கண்ணுக்குத் தெரியும் இவ்விடத்தில் இருந்து நாம் இன்று நினைவு கூர்கிறோம்.கடற்கரையானாலும், பனிமலைச் சிகரமானாலும், காவலர் பணி, இடர் நிறைந்தது. உனது வருங்காலத்திற்கு எனது தற்காலத்தை ஈந்தேன். நாளை உன் விடியலுக்கு இன்று நான் மடியத் தயார் என்று கூறி இவ்வாண்டு இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் நம்மைவிட்டு பிரிந்த காவல் குடும்பத்தினரின் எண்ணிக்கை 188. மடிந்த இவர்கள் விட்டுச் சென்ற பணிகளை செய்து முடிப்போம் என்று உறுதிபூண்டு, அவர்களின் வீரத்தியாகம் வீண்போகாது என்று இந்த காவலர் வீரவணக்க நாளில் உறுதி மொழி ஏற்கப்பட்டது.கடந்த 01.09.2022 முதல் 31.08.2023 வரை வீர மரணமடைந்த காவல்துறையினர் தமிழ்நாட்டைச் சேர்ந்த தலைமை காவலர் திரு. சுந்தரய்யா, பெண் தலைமை காவலர் திருமதி. ஷீலா ஜெபமணி, காவலர் திரு. நவநீதகிருஷ்ணன், ஆந்திரப்பிரதேசத்தைச் சேர்ந்த காவலர் திரு. பவன்குமார், அருணாச்சலபிரதேசத்தை சேர்ந்த காவலர் திரு. சிங்கிரி மம்மாய் மற்றும் ஒருவர், அசாம் மாநிலத்தைச் சேர்ந்த தலைமை காவலர் திரு. தீரைன் தைமரி மற்றும் ஒருவர், பீகார் மாநிலத்தைச் சேர்ந்த உதவி ஆய்வாளர் எம்.டி அப்பாஸ் மற்றும் 7 பேர், சட்டீஸ்கரைச் சேர்ந்த ஏ.எஸ்.ஐ ராமுராம் நாக் மற்றும் 18 பேர், குஜராத்தை சேர்ந்த தலைமை காவலர் திரு. ஜஸ்வந்த்சின் சவுகான் மற்றும் ஒருவர், இமாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த எஸ்.ஐ திரு. ராகேஷ் குமார் கோரா மற்றும் 6 பேர், ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த எஸ்.ஐ திரு. அமித்குமார் திவாரி மற்றும் ஒருவர், கர்நாடகாவை சேர்ந்த சி.பி.ஐ திரு. ரவி சி உக்குந்த் மற்றும் 15 பேர், கேரளாவைச் சேர்ந்த எஸ்.ஐ திரு. ஜோபி ஜார்ஜ் மற்றும் ஒருவர், மத்தியபிரதேசத்தைச் சேர்ந்த ஆய்வாளர் திரு. ராஜாராம் வாஸ்க்லே மற்றும் 16 பேர், மஹாராஷ்டிராவைச் சேர்ந்த ஏ.பி.ஐ திரு. சுதர்சன் பிகாஜி தாதீர் மற்றும் 5 பேர், மணிப்பூரைச் சேர்ந்த ஹவில்தார் திரு. ஹெய்ஸ்நாம் ஜித்தன் சிங் மற்றும் 7 பேர், நாகலாந்தைச் சேர்ந்த காவலர் திரு. கெவிஷ்கோ கேட் மற்றும் ஒருவர், ஒடிசாவை சேர்ந்த காவலர் திரு. சுசந்தகுமார் மொகாந்திபஞ்சாப்பை சேர்ந்த காவலர் திரு. மன்தீப் சிங் மற்றும் 2 பேர், ராஜஸ்தானை சேர்ந்த காவலர் திரு. பிரக்லத் சிங், உத்திரபிரதேசத்தை சேர்ந்த காவலர் திரு. சந்திப் நிஷாத் மற்றும் 2 பேர், உத்தரகாண்டைச் சேர்ந்த எஸ்.ஐ பிரதீப் சிங் ராவத் மற்றும் 3 பேர், மேற்குவங்கத்தை சேர்ந்த ஏ.எஸ்.ஐ திரு. பிலாஸ் சதுக்கான் மற்றும் 3 பேர், டெல்லியைச் சேர்ந்த ஏ.எஸ்.ஐ திரு. சம்போ தயாள் மீனா மற்றும் 2 பேர், ஜம்முகாஷ்மீர் பகுதியைச் சேர்ந்த தலைமை காவலர் திரு. பயாஸ் அஹமத் மற்றும் 7 பேர், லடாக்கை சேர்ந்த காவலர் திரு. மோக் ராஷா, அசாம் ரைபிள்ஸ் பிரிவைச் சேர்ந்த ரைபிள்மேன் திரு. அலோக்ராவ், எல்லை பாதுகாப்பு படையைச் சேர்ந்த எஸ்.ஐ திரு. துலாஸ் சந்திர சர்மா மற்றும் 21 பேர், மத்திய தொழில் பாதுகாப்பு படையைச் சேர்ந்த திரு. மலிநாத் கவடே, மத்திய பாதுகாப்பு படையைச் சேர்ந்த ஆய்வாளர் சுனில்குமார் மற்றும் 14 பேர், இந்தோ திபத்தியன் எல்லை பாதுகாப்பு படையைச் சேர்ந்த திரு. டிகாம் சிங் நெகி மற்றும் 4 பேர், எஸ்.எஸ்.பியைச் சேர்ந்த ஏ.எஸ்.ஐ திரு. ஜீத்குமார் மற்றும் 4 பேர், என்.டி.ஆர்.எப் பிரிவை சேர்ந்த காவலர் திரு. ஜெகன்சிங், ரயில்வே பாதுகாப்பு படையைச் சேர்ந்த ஏ.எஸ்.ஐ திரு. பாரத் குமார் பிரஜபதி மற்றும் 12 பேர் ஆகிய மேற்படி 188 காவல்துறையினர் உனது வருங்காலத்தில் எனது தற்காலத்தை ஈந்தேன்என்று கூறி வீர மரணம் அடைந்துள்ளார்கள்.இந்த காவலர் வீர வணக்க நாளில் அவர்களின் தியாகத்தை போற்றும் வகையில் அவர்களுக்கு அரசு மரியாதையுடன் துப்பாக்கி குண்டுகள் முழங்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் அவர்கள் தலைமையில் அஞ்சலி செலுத்தி உறுதிமொழி எடுக்கப்பட்டது.இதனையடுத்து  தூத்துக்குடி மாவட்ட ஆயுதப்படை காவல் ஆய்வாளர் திரு. சுனைமுருகன் மற்றும் உதவி ஆய்வாளர் திரு. நங்கையர்மூர்த்தி தலைமையில் ஆயுதப்படை போலீசார் 54 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தினர்.இந்த வீர வணக்க நாள் நிகழ்ச்சியில் தூத்துக்குடி தலைமையிடத்து காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் திரு. கார்த்திகேயன்காவல் துணை கண்காணிப்பாளர்கள்  தூத்துக்குடி ஊரகம் திரு. சுரேஷ், மணியாச்சி திரு. லோகேஷ்வரன்கோவில்பட்டி திரு. வெங்கடேஷ், விளாத்திகுளம் திரு. ஜெயச்சந்திரன், சாத்தான்குளம் திரு. அருள்காவல்ஆய்வாளர்கள் தூத்துக்குடி தென்பாகம் திரு. ராஜாராம், வடபாகம்  தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலையம் திருமதி. மாரியம்மாள், தூத்துக்குடி போக்குவரத்து பிரிவு திரு. மயிலேறும்பெருமாள், மத்திய பாகம் திரு அய்யப்பன்உட்பட காவல் ஆய்வாளர்கள் மற்றும் காவல்துறையினர் பலர் கலந்து கொண்டனர்.

உங்கள் கருத்தை பதிவிடுக

Comments Added Successfully!

  • Share on

விளாத்திகுளம் அருகே வைப்பாற்றில், ED ரெய்டு!

தருவைகுளம் பகுதியை சேர்ந்த 12 மீனவர்களை மாலத்தீவு கடலோர காவல் படை கைது.

  • Share on