Breaking News

பாரதியாரின் 102வது நினைவு நாளை முன்னிட்டு பாரதியாரின் திருவுருசலைக்கு அமைச்சர் கீதா ஜீவன் மாலை அணிவித்து மரியாதை.

  • Share on

பாரதியாரின் 102வது நினைவு நாளை முன்னிட்டு பாரதியாரின் திருவுருசலைக்கு அமைச்சர் கீதா ஜீவன் மாலை அணிவித்து மரியாதை.மகாகவி சுப்ரமணிய பாரதியாரின் நினைவு 102வது நினைவு தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள எட்டையாபுரத்தில் அமைந்துள்ள  மகாகவி பாரதியாரின் மணிமண்டபத்தில் உள்ள பாரதியாரின் திருவுருவை சிலைக்கு  அமைச்சர் கீதா ஜீவன் மற்றும் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.இந்நிகழ்ச்சியில் புதூர் மத்திய ஒன்றிய செயலாளர் ராதாகிருஷ்ணன் ,புதூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் செல்வராஜ், புதூர் மேற்கு ஒன்றிய செயலாளர் மும்மூர்த்தி, விளாத்திகுளம் கிழக்கு ஒன்றிய செயலாளர் சின்ன மாரிமுத்து, விளாத்திகுளம் மேற்கு ஒன்றிய செயலாளர் அன்புராஜன் ,எட்டையாபுரம் பேரூராட்சி மன்ற தலைவர் இராமலட்சுமி சங்கரநாராயணன் ,எட்டையாபுரம் வட்டாட்சியர் ,கோவில்பட்டி கோட்டாட்சியர் மற்றும் அரசு அதிகாரிகள் பொதுமக்கள் என பலர் உடன் இருந்தனர்.இதுபோல் பாரதியாரின் சிலைக்கு பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் அமைப்பினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

உங்கள் கருத்தை பதிவிடுக

Comments Added Successfully!

  • Share on

தூத்துக்குடி- தூத்துக்குடி துறைமுகத்திலிருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் சேவை!

எட்டயபுரத்தில் அணிவகுத்த இளம் பாரதிகள்!

  • Share on