Breaking News

"9-வது சர்வதேச யோகா தினத்தை" முன்னிட்டு அங்கன்வாடி பணியாளர்களுக்கு சிறப்பு யோகா பயிற்சி முகாம்!

  • Share on


9-வது சர்வதேச யோகா தினம்: ஜூன் 21 அன்று நாடு முழுவதும் கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி நாளை (ஜூன் 21) நடைபெறவிருக்கும் சிறப்பு யோகா பயிற்சிகள் மற்றும் சர்வதேச யோகா தின கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் அங்கன்வாடிகளில் பயின்று வரும் குழந்தைகளுக்கு சிறப்பு யோகா பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளது.

இதனை முன்னிட்டு இன்று விளாத்திகுளம் தனியார் திருமண மண்டபத்தில் விளாத்திகுளம் அரசு மருத்துவமனை யோகா & இயற்கை மருத்துவம் மற்றும் சித்த மருத்துவப் பிரிவு சார்பில், மருத்துவர்கள் தமிழ் அமுதன் மற்றும் ஜனார்த்தனன் ஆகியோர் தலைமையில் அங்கன்வாடி மேற்பார்வையாளர்கள் முன்னிலையில் அங்கன்வாடி பணியாளர்களுக்கு யோகாசனத்தின் சிறப்புகள் மற்றும் முக்கியத்துவம், யோகா பயிற்சிகள், குழந்தைகளுக்கு வழங்கப்பட வேண்டிய சத்தான உணவுகள் உள்ளிட்டவை குறித்து எடுத்துரைக்கப்பட்டது.

பின்னர் நாளை விளாத்திகுளம் பகுதியில் உள்ள அங்கன்வாடி மையங்களில் பயின்று வரும் குழந்தைகளுக்கு அந்தந்த அங்கன்வாடி மைய பணியாளர் கற்றுக் கொடுக்க வேண்டிய யோகாசனங்கள் பயிற்றுவிக்கப்பட்டது.பின் நிகழ்வின் இறுதியாக இந்த சிறப்பு பயிற்சி முகாமிற்கு வந்திருந்த அங்கன்வாடி பணியாளர்கள் அனைவருக்கும் பழங்கள், உலர் திராட்சை, முளைக்கட்டிய பயிறு வழங்கப்பட்டது.

உங்கள் கருத்தை பதிவிடுக

Comments Added Successfully!

  • Share on

தூத்துக்குடியில் ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான உணவு குடோனுக்கு சீல்? ரூபாய் 2 கோடி மதிப்பிலான மக்காச்சோளம் பறிமுதல்!

மன அழுத்தத்தைப் போக்கும் வகையில் காவல்துறையினருக்கு சிறப்பு யோகா பயிற்சி முகாம்!

  • Share on