தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள பூதலாபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் உள்ள தலைமையாசிரியர் அறையில் வைக்கப்பட்டிருந்த ரூபாய் 18000 மதிப்புள்ள இரண்டு ரேடியோ ஆம்ப்ளிபயர் திருடு போனதை கண்டு பள்ளியின் தலைமை ஆசிரியர் சாய்ராம் அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து சாய்ராம் கடல்குடி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், காடல்குடி காவல் நிலைய போலீசார், பூதலாபுரம் கிராமத்தில் சென்று விசாரணை நடத்திய போது, அதே கிராமத்தில் உள்ள கிறிஸ்தவ சர்சில் உள்ள 9 ஆயிரம் மதிப்புள்ள 1 ரேடியோ ஆம்ப்ளிபயர் ஒன்றும் திருடு போனதும், அதே கிராமத்தில் உள்ள காமாட்சி அம்மன் கோவில் கதவின் பூட்டை உடைத்து திருட்டு முயற்சி நடந்ததும் தெரியவந்தது, இதுகுறித்து காடல்குடி காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். இதேபோன்று காடல்குடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளான மாவிலோடை, கந்தசாமிபுரம், பூதலபுரம் உள்ளிட்ட பகுதிகளில் கடந்தாண்டு கோவில்களில் தொடர் திருட்டு நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கதாகும். மேலும் இரண்டு நாட்களுக்கு முன்பு வெம்பூர் கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில், ரூபாய் ஒரு லட்சம் மதிப்பிலான LED eடிவி, கம்ப்யூட்டர்கள் திருடு போனதும் குறிப்பிடத்தக்கதாகும். விளாத்திகுளம் காவல் உட்கோட்ட எல்லைப் பகுதிகளில் நடைபெற்ற தொடர் திருட்டுக்கு முற்றுப்புள்ளி வைப்பாரா விளாத்திகுளம் டிஎஸ்பி ஜெயச்சந்திரன்? என்று பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது...




உங்கள் கருத்தை பதிவிடுக