கமுதியில் முதல் கட்டமாக வீடு வீடாகச் சென்று கலைஞர்  மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் விண்ணப்ப படிவங்களுடன்  டோக்கன் விநியோகம்! ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் ரேஷன் கடை விற்பனையாளர்கள் மூலமாக பயனாளிகளுக்கு ,வீடு வீடாகச் சென்று கலைஞர்  மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் விண்ணப்ப படிவங்களுடன்  முதல் கட்டமாக டோக்கன் விநியோகம் நடைபெற்றது.கமுதி நகர் பகுதியில்  கடை எண் 1 மற்றும் 2 விற்பனையாளர் ஜோதி ராமலிங்கம் கிருஷ்ணவேணி ஆகியோர் பயனாளிகளின் இல்லங்களுக்கு வீடு வீடாகச் சென்று காலை 60 மாலை 60 என தல 120 பயனாளிகளுக்கு  படிவங்களை வினியோகம் செய்து கையொப்பம் பெற்றனர். படிவங்களில் கேட்கப்பட்ட ஆவணங்களுடன் பயனாளிகள் வரும் 24ஆம் தேதி தாங்கள் பகுதியில் உள்ள ரேஷன் கடைகளுக்கு படிவத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தவறாது கலந்து கொள்ளுமாறு விற்பனையாளர்கள் அறிவுறுத்தினர்.