முத்துலாபுரம் அருள்மிகு ஸ்ரீ பவானீஸ்வரர் உடனுறை பார்வதி அம்மாள் திருக்கோவிலில் 

ஆனி மாத கடைசி சனிக்கிழமை முன்னிட்டு சிறப்பு பூஜை!




தூத்துக்குடி மாவட்டம் எட்டையாபுரம் அருகே உள்ள முத்துலாபுரம் கிராமத்தில் அமைந்துள்ள

600 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ பார்வதி சமேத பவானீஸ்வரர் சுவாமி கோவிலில் மிகவும் சிறப்பு வாய்ந்த இந்த திருத்தலத்தில் நாள்தோறும் ஏராளமான பொதுமக்கள் தரிசனம் செய்து செல்வர். அதிலும்  முக்கிய தினங்களில் பொதுமக்கள் அதிகளவில் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்வது வழக்கம்.




அந்த வகையில், இன்று ஆலயத்தில் நடைபெற்ற ஆனி மாத கடைசி சனிக்கிழமை முன்னிட்டு ஸ்ரீ பார்வதி சமேத பவானீஸ்வரருக்கு பால்,தயிர், இளநீர்,சந்தனம், திருநீறு,மஞ்சள் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது,நன்கு அலங்கரிக்கப்பட்டுப்பின் சிறப்பு தீபாராதனை காட்டப்பட்டது. 



இதில் எட்டையாபுரம் உள்ளிட்ட பகுதியைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் மனமுருகி சுவாமி தரிசனம் செய்து சென்றனர்.