விளாத்திகுளத்தில் அழகுமுத்துக்கோனின் 269-வது குருபூஜை விழா: வட்டார யாதவர் சமுதாயம் மக்கள் சார்பாக கொண்டாட்டம்!




இந்திய சுதந்திரப் போராட்ட வீரர் பிறர் அழகுமுத்துக்கோனின் 316 -வது பிறந்த நாள் விழா மற்றும் 269 - வது குருபூஜை விழா தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு அரசியல் அமைப்பினராலும், சமூக ஆர்வலர்கள் சார்பாகவும் அரசு சார்பாகவும் மரியாதை செய்யபட்டு   கொண்டாடப்பட்டு வருகிறது.




இதன் ஒரு பகுதியாக தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் வட்டார யாதவர் சங்கம் சார்பில்,விளாத்திகுளம் பேருந்து நிலையம் முன்பு நன்கு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அழகு முத்து கோனின் திருவுருவப்படத்துக்கு, விளாத்திகுளம் வட்டார யாதவர் சமுதாயம் சார்பில் மாலையை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது அதனைதொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது.



அதனைத்தொடர்ந்து அதிமுக, தமிழக வெற்றிகழகம்,திமுக, விடுதலை சிறுத்தைகட்சி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.