விளாத்திகுளம் சார்லஸ் பதின் ம மேல்நிலைப் பள்ளியில் விபத்தில்லா தீபாவளி விழிப்புணர்வு நிகழ்ச்சி!


தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சார்லஸ் பதின்ம மேல்நிலைப் பள்ளியில், விளாத்திகுளம் தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை சார்பில் விபத்தில்லா தீபாவளி என்ற தலைப்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு பள்ளி முதல்வர் பார்பரா ஜாக்லின் வரவேற்புரை ஆற்றினார். விளாத்திகுளம் தீயணைப்பு நிலைய ஆய்வாளர் சங்கரன் கலந்து கொண்டு, மாணவ, மாணவிகளுக்கு பாதுகாப்பாக பட்டாசு வெடிப்பது, பட்டாசு வெடிக்க வேண்டிய பாதுகாப்பான இடங்கள், நேரம் மற்றும் தீ விபத்துகள் ஏற்படாமல் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விளக்கிக் கூறினார்.

மேலும், மாணவ, மாணவிகள் எழுப்பிய சந்தேகங்களுக்கு உடனிருந்த தீயணைப்பு வீரர்கள் விளக்கமாக பதிலளித்தனர். இந்நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். நிறைவில் ஆசிரியர் முருகன் நன்றி கூறினார்.