கமுதி அருகே கிராமத்திற்கு புதிய பேருந்து வசதி பேருந்தை தொட்டு வணங்கி முதலமைச்சர் மு க ஸ்டாலின் அமைச்சர் ராஜா கண்ணப்பன் ஆகியோருக்கு கை கூப்பி நன்றி தெரிவித்த பள்ளி மாணவ மாணவியர். ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே ஒ.கரிசல்குளம் கிராமத்திற்கு மாலை நேரத்தில் பள்ளி மாணவர்கள் செல்லும் வகையில் புதிய பேருந்து வசதியை ஏற்பாடு செய்த தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தமிழக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு கிராம பள்ளி மாணவ மாணவிகள் பேருந்தை தொட்டு வணங்கி கைகளை கூப்பி நன்றி தெரிவித்தனர், முன்னதாக கமுதி போக்குவரத்து கிளை மேலாளர் ராஜ்குமார் ஓட்டுநர் நடத்துனர் ஆகியோருக்கு கிராம மக்கள் சார்பில் பெண்கள் குலவை இட்டு சால்வை அணிவித்து இனிப்பு வழங்கி வரவேற்றனர். நிகழ்ச்சியில் முன்னாள் திமுக மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் ஊராட்சி தலைவர் பாண்டி உள்ளிட்ட கிராம பொதுமக்கள் பங்கேற்றனர்.
தமிழ்நாடு
புதிய பேருந்து வசதி முதலமைச்சருக்கு கை கூப்பி நன்றி தெரிவித்த பள்ளி மாணவ மாணவியர்!
Admin
1 நிமிட வாசிப்பு