விளாத்திகுளம் அருகே பொங்கல் விழாவை முன்னிட்டு மாபெரும் மாட்டு வண்டிகள் பந்தயம்! தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள புதுசின்னையாபுரம் கிராமத்தில்  ஸ்ரீ காளியம்மன் கோவில் ஆடி பொங்கல் விழாவை முன்னிட்டு மாபெரும் மாட்டுவண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது.சின்னமாடு,பூஞ்சிட்டு என இரு பிரிவுகளாக நடைபெற்ற போட்டியில், மதுரை, விருதுநகர், சிவகங்கை ராமநாதபுரம் திருநெல்வேலி உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 37 ஜோடி மாடுகள் போட்டியில் கலந்து கொண்டு சீறிப்பாய்ந்தன.போட்டியில் வெற்றி பெற்ற மாட்டின் உரிமையாளர் மற்றும் ஓட்டி வந்த சாரதிகளுக்கு விழா கமிட்டி சார்பாக பரிசுத்தொகை வழங்கி கௌரவிக்கப்பட்டது,நடைபெற்ற மாட்டுவண்டிகள் பந்தயத்தை சாலையில் இருபுறமும் இன்று ஏராளமான பொதுமக்கள் கண்டு ரசித்தனர்.இந்த மாபெரும் மாட்டு வண்டி எல்கை பந்தயத்தை புதூர் திமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் செல்வராஜ் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.