கமுதி அருகே முளைப்பாரி உற்சவ விழா-பெண்களுடன்,ஆண்கள் முளைப்பாரியை சுமந்து சென்று உற்சாகம்!
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே நீராவி கரிசல்குளம் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ முத்தாலம்மன் காளியம்மன் ஆலய வடாந்திர வைகாசி பொங்கல் முளைப்பாரி உற்சவ விழா கடந்த வாரம் காப்பு கட்டு விழா தொடங்கியது,திருவிழாவை முன்னிட்டு நாள்தோறும் முத்தாலம்மன் காளியம்மன் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் நடைபெற்றது.
முக்கிய நிகழ்ச்சியாக முளைப்பாரி உற்சவம் காப்பு கட்டி விரதம் இருந்த ஆண்கள் பெண்கள் சிறுவர் சிறுமியர் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் சிம்லா மேளம் இசை வாத்தியங்களுடன் நீராவி கரிசல்குளம் கிராமத்தின் முக்கிய வீதிகளின் வழியாக பரிவார தெய்வங்களை ஆலயம் வளலம் சுற்றி சென்று கங்கை நீரில் முளைப்பாறிய கரைத்து வழிபாடு செய்து நிறைவு செய்தனர்.
முன்னதாக தலையில் சுமந்து சென்ற முளைப்பாறியை கீழே இறக்கி வைத்து பெண்களுடன் சிறுமியர்களும் முளைப்பாரியை சுற்றி வட்டமிட்டு கும்மிப்பாட்டு பாடி கும்மியாட்டம் நடனமாடி உற்சாகமாக மகிழ்ந்தனர் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.