100 நாள் வேலை திட்டத்தில் தமிழகத்திற்கு ரூ. 2,999 கோடி நிதியை மத்திய அரசு விடுவிப்பு!
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி சட்டத்தை மத்திய அரசு கடந்த 2005-ம் ஆண்டு நிறைவேற்றியது, வேலை வாய்ப்பு ஏற்படுத்தவும்,வறுமையை ஒழிக்கவும் 100 நாள் வேலைத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் சுமார் 25.25 கோடி பேர் 100 நாள் வேலைக்கு பதிவு செய்துள்ளனர்,ஆனால் தற்போது 14.35 கோடி பேர் தற்போது தொழிலாளராக பணி செய்து வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த 5 மாதத்திற்கு மேலாக தமிழ்நாட்டிற்கு தரவேண்டிய 4 ஆயிரத்து 34 கோடி நிதியை மத்திய அரசு வழங்காமல் நிறுத்தி வைத்திருந்தது. இந்த நிதியை விடுவிக்குமாறு தமிழக அரசு தொடர்ந்து வலியுறுத்தி வந்தது, மேலும் திமுக நாடாளுமன்ற குழுதலைவர் கனிமொழி மற்றும் தமிழக நிதிஅமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர் மத்திய நிதி அமைச்சர் நிர்மலாசீதாராமனிடம் நிறுத்திவைக்கப்பட்டுள்ள 100 நாள் வேலைத்திட்ட நிதியை விடுவிக்குமாறு தமிழக அரசு சார்பில் மனு அளித்தனர், அதுமட்டுமன்றி திமுக எம்.பிக்கள் டெல்லியில் பல்வேறு கட்ட போராட்டங்களையும் நடத்தினர், இந்நிலையில்தற்போது ரூ.2,999 கோடி நிதியை விடுவித்துள்ளது.