தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி,கழுகுமலை,கயத்தார் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில தினங்களாக பெய்த பலத்த கன மழையின் காரணமாக நேற்று(வியாழக்கிழமை) கழுகுமலை அருகேயுள்ள காலங்காரைப்பட்டிஇ ராமலிங்கபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் விவசாயிகள் சுமார் 5000 ஏக்கர் அளவில் பயிரிட்ட இருந்த மக்காச்சோள பயிர்கள் முற்றிலுமாக சேதமடைந்தன. ஏக்கருக்கு 30 ஆயிர ரூபாய் வரை செலவு செய்து இருந்த நிலையில் பலத்த மழையின் காரணமாக மக்காச்சோள பயிர்கள் சேதமடைந்துவிட்டதாக தமிழக அரசு தங்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை வைத்து இருந்தனர். இந்நிலையில் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான கடம்பூர்.செ.ராஜீ பாதிக்கப்பட்ட மக்காச்சோள பயிர்களை பார்வையிட்டார். மேலும் விவசாயிகளிடம் பாதிப்புகள் குறித்து கேட்டறிந்தார்.
பின்னர் முன்னாள் அமைச்சர் கடம்பூர்.செ.ராஜீ செய்தியாளர்களிடம் பேசுகையில் வறட்சி மற்றும் மழையின் காரணமாக பயிர்கள் பாதிக்கப்பட்டால் அதிமுக ஆட்சியில் உடனடியாக விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்கப்பட்டது. கடந்த ஆண்டு விலலிசேரியில் இதே போன்று பலத்த மழைக்கு பயிர்கள் பாதிக்கப்பட்டது. அப்போது விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தேன். ஆனால் தமிழக அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதற்பொழுது சில தினங்களாக பெய்த மழைக்கு கழுகுமலை, பெரியசாமிபுரம்,உசிலங்குளம் பகுதியில் மக்காச்சோளம்,உளுந்து,பாசி,நெற் பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இவற்றை உரிய கணக்கிடு செய்து விவசாயிகளுக்கு தமிழக அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும், ஏக்கர் ஒன்றுக்கு 30 ஆயிர ரூபாய் நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,பாதிப்புகள் குறித்தும், நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை மனு அளிக்க உள்ளதாகவும், அரசு உரிய நடவடிக்கை எடுத்து நிவாரணம் வழங்கவில்லை என்றால் விவசாயிகளை திரட்டி மிகப்பெரிய அளவில் பெரிய போராட்டம் நடத்தவுள்ளதாகவும், திமுக அரசு வேளாண்மைக்கு தனி பட்ஜெட் என்று கூறினாலும், அது வெறும் கண்துடைப்பாக தான் உள்ளது என்றும்,கோவில்பட்டி அருகே குமராபுரத்தில் பள்ளி தொடர்பாக அப்பகுதி மக்கள் வைக்கும் நியாயமான கோரிக்கை குறித்து மாவட்ட ஆட்சியர், கல்வித்துறை அமைச்சர் வரை தான் எடுத்து வைத்தாகவும், ஆனால் இதுவரை அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை, இதனால் குழந்தைகள் கல்வி பாதிக்கப்படும் நிலை உள்ளது. இனியும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் அப்பகுதி மக்களை திரட்டி போராட்டம் நடத்தவுள்ளதாக கூறினார்.



உங்கள் கருத்தை பதிவிடுக