ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியில் கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்து அருள் பாலித்து வரும் ஸ்ரீ காமாட்சி அம்மன் ஆலய எட்டாம் ஆண்டு வருட அபிஷேக விழாவை முன்னிட்டு, காமாட்சி அம்மனுக்கு பால்குடம் ஊர்வலம் பாலாபிஷேகம் மஞ்சள் நீர் அபிஷேகம் நடைபெற்றது.
முன்னதாக சாயல்குடி ஸ்ரீ சுந்தர விநாயகர் ஆலயத்தில் இருந்து மேளதாளங்கள் வான வேடிக்கையுடன் பக்தர்கள் மஞ்சள் நீர் பால்குடன்களை சுமந்து சென்று காமாட்சி அம்மன் ஆலயம் ஆலயம் வலம் சென்று அம்மனுக்கு மஞ்சள், பால்,விபூதி, பஞ்சாமிர்தம், பன்னீர், சந்தனம் மூலிகை திரவிய 16 வகையான அபிஷேக அலங்காரம் நடைபெற்றது.
தமிழ்நாடு
சாயல்குடி காமாட்சி அம்மன் வருடாபிஷேக விழா!
Admin
1 நிமிட வாசிப்பு