விளாத்திகுளம் அருகே  தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தனியார் ஹோட்டலில் நிர்ணயம் செய்யப்பட்ட விலையை விட கூடுதலாக ஐந்து ரூபாய்  வசூலிப்பதாக குற்றச்சாட்டு - சமூக வலைதளங்களில் வீடியோ வெளியாகி பரபரப்பு.தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே மேலக்கரந்தை பகுதியில் தூத்துக்குடி மதுரை தேசிய நெடுஞ்சாலையில் ஆரிஷ் என்ற ஹோட்டல் ஒன்று செயல் பட்டு வருகிறது. இந்நிலையில் அந்த ஹோட்டலுக்கு ஒரு வாடிக்கையாளர் சென்று உணவு பொருட்கள், தின்பண்டங்கள், குடிநீர் பாட்டில் ஆகியவற்றை வாங்கியுள்ளார். அப்போது நிர்ணயம் செய்யப்பட்டுள்ள விலையை விட  ஒவ்வொரு பொருள்களுக்கும் கூடுதலாக ஐந்து ரூபாய் வசூலித்ததாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த அந்த வாடிக்கையாளர் ஹோட்டலில் பணியில் இருந்த ஊழியரிடம் கேட்டதாக தெரிகிறது. அதற்கு சரியான பதில் அளிக்காமல் 25 கிலோமீட்டர் தூரத்தில் கடைகள் எதுவும் இல்லை இதுதான் கடை என்று மழுப்பலாக கூறியுள்ளார்.பெரும்பாலும் தேசிய நெடுஞ்சாலையில் பயணிக்கக் கூடிய வாகன ஓட்டிகள் இதுபோன்ற ஹோட்டலை நம்பி தான் செல்கின்றனர். ஆனால் அங்கு கூடுதலாக கட்டண வசிப்பது மட்டுமின்றி, பொருட்களும் சுகாதாரம் மற்றும். தரம் இல்லாமல் இருப்பதாக தொடர்ச்சியாக புகார் எழுந்து வருகிறது.கூடுதலாக வேலை விற்பதாக சர்ச்சை எழுந்துள்ள இந்த ஹோட்டலில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு உணவு பாதுகாப்புத் துறையினர் சுகாதாரம் இல்லை என்று நடவடிக்கை எடுத்தது குறிப்பிடத்தக்கது.மீண்டும் உணவு பாதுகாப்பு துறையினர் ஆய்வு நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் கோரிக்கை வைத்துள்ளனர்.