விளாத்திகுளம் அருகே மக்கள் களம் நிகழ்ச்சி- மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி கோரிக்கை மனுக்களை பெற்ற கனிமொழி எம்பி - 3 கோடி 50 லட்சம் மதிப்பீட்டில் சாலை பணிகளை தொடங்கி வைத்தார் .
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள எத்திலப்பநாயக்கன்பட்டி,நீராவி புதுப்பட்டி , தலைக்கட்டுபுரம், ராமனூத்து ஆகிய கிராமங்களில் நடைபெற்ற மக்கள் களம் நிகழ்ச்சியில் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி எம்பி சிறப்பாக அழைப்பாளராக கலந்து கொண்டு மக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றார்.
மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.தொடர்ந்து எத்திலப்பநாயக்கன்பட்டி கிராமத்தில் 38லட்ச ரூபாய் மதிப்பில் புதிதாக கட்டப்படவுள்ள சமுதாய நலக்கூடத்திற்கு அடிக்கல் நாட்டினார். தலைக்காட்டுபுரத்தில் 42 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் புதிய சாலை பணிகளை தொடங்கி வைத்தார்.
மேலும் நீராவி புதுப்பட்டியில் 193.68 லட்ச ரூபாய் மதிப்பெட்டில் புதிய சாலை பணியை தொடங்கி வைத்தார். இதையடுத்து இராமனூத்து கிராமத்தில் 76.95 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் சாலை பணிகளை கனிமொழி எம்பி திறந்து வைத்தார்.இந்நிகழ்ச்சிகளில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன், விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன், மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.