பார்வையற்றோருக்கான இந்திய கிரிக்கெட் அணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள வீரரை சந்தித்து வாழ்த்திய கனிமொழி கருணாநிதி எம்.பி! தூத்துக்குடி மாவட்டம் - ஓட்டப்பிடாரம் வட்டம் கே.துரைசாமிபுரம் ஊராட்சியை சேர்ந்த 24 வயதான மகாராஜா இவர் பார்வையற்றோருக்கான இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.ஆகஸ்ட் 18 முதல் ஆகஸ்ட் 27 வரை இங்கிலாந்து நாட்டில் உள்ள பர்மிங்காமில் நடைபெறும் IBSA (சர்வதேச பார்வையற்றோர் விளையாட்டு கூட்டமைப்பு) உலக விளையாட்டு 2023 இல் பங்கேற்கிறார். தூத்துக்குடி மாவட்டம் - கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட விளாத்திகுளம் அருகே உள்ள மஞ்சநாயக்கன்பட்டி ஊராட்சி, எத்திலப்ப நாயக்கன்பட்டியில் நடைபெற்ற

"மக்கள் களம்" நிகழ்ச்சியில் திமுக துணைப் பொதுச் செயலாளரும்,தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கருணாநிதியை சந்தித்த பார்வையற்றோருக்கான இந்திய கிரிக்கெட் அணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள வீரர் மகாராஜா. தூத்துக்குடி மாவட்டம் எப்பொழுதும் வென்றான் அருகில் உள்ள கே.துரைசாமிபுரம் தனது சொந்த ஊர் என்று தெரிவித்தார். ஆகஸ்ட் 18 முதல் 27 வரை பர்மிங்காமில் நடைபெறும் IBSA (சர்வதேச பார்வையற்றோர் விளையாட்டு கூட்டமைப்பு) உலக விளையாட்டு 2023இல் விளையாட, இந்தியா அணி 17 நபர்களில் தமிழ்நாட்டிலிருந்து தேர்வு செய்யப்பட்டுள்ள முதல் வீரன் என்று தன்னை அறிமுகப் படுத்திக்கொண்டார். இதற்கு, கனிமொழி எம்.பி அவர்கள்: நீங்கள் திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் தங்கி பயிற்சி எடுத்துவருகிறார்கள், தங்களை தான் சந்திக்க வேண்டும் என்று நினைத்து இருந்தான். மகாராஜாவிடம் இருந்து மனுவைப் பெற்றுக்கொண்டு,அதற்கு நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். கிரிக்கெட் வீரர் மகாராஜாவுக்கு ஊக்கத் தொகை அளித்து, நன்றி மற்றும் வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.