தூத்துக்குடியில் உள்ள பழமையான  எஸ் வி எஸ் கே சபா சார்பில் கொரோனா உள்ளிட்ட கொடிய நோயிலிருந்து மக்களை காக்கவும் உலக நன்மை வேண்டியும் 11 கோடி ஸ்ரீ ருத்ர ஜபம் ஸ்ரீ மஹாருத்யுஞ்ஜய  ஹோமம் ஏராளமான வேத விற்பனர்கள் பங்கேற்பு

தூத்துக்குடியில் உள்ள பழமையான எஸ் வி எஸ் கே பஜனை மடம் சார்பில் கடந்த இரண்டு ஆண்டுகளாக உலக நன்மை வேண்டியும் கொரோனா உள்ளிட்ட கொடிய நோய்கள் இனிமேல் உலக மக்களை ஆட்கொள்ளாமல் இருக்க மகா தேவாய நமஹ என்ற ஜெபத்தை 11 கோடி தடவை உச்சரித்து ஸ்ரீ மஹாருத்ர ஜெபம் நடைபெற்றதுமகா தேவாய நமஹ ஸ்ரீ ருத்ர ஜெப நிறைவை முன்னிட்டு எஸ் வி எஸ்.கே சபாவில் இன்று மஹாருத்யுஞ்ஜய ஹோமம் பூஜ்யஸ்ரீ வித்யானந்த சரஸ்வதி சுவாமிகள் தலைமையில் நடைபெற்றது இதில் ஏராளமான வேத விற்பனர்கள் கலந்து கொண்டு மகா தேவாய நமஹ என்ற ஜெபத்தையும், ருத்ர பாராயணம் ,லலிதா சரஸ்ஹஸ்ர நாம பாராயணம், ருத்ர ஹோமம் ஆகியவற்றை செய்து வழிபாடு நடத்தினர் இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு வழிபட்டு சென்றனர்.