நத்தம்,அதிமுக ஒன்றிய கவுன்சிலர்கள் உள்ளிட்ட அதிமுக முக்கிய நிர்வாகிகள் அக்கட்சியில் இருந்து விலகி அமைச்சர் சக்கரபாணி அவர்கள் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர் !

திண்டுக்கல் மேற்கு மாவட்டம் நத்தம் சட்டமன்ற தொகுதி  கோட்டையூர் ஒன்றிய குழு உறுப்பினரும் அதிமுக வடக்கு ஒன்றிய அம்மா பேரவை செயலாளருமான சத்தியமூர்த்தி, சாத்தம்பாடி ஒன்றிய குழு உறுப்பினரும் அதிமுக தெற்கு ஒன்றிய எம்ஜிஆர் மன்ற செயலாளருமான பழனிச்சாமி,  ஆவிச்சிபட்டி ஒன்றிய குழு உறுப்பினர் அம்மாபொன்னு, சிறுகுடி ஒன்றிய குழு உறுப்பினர் சுரேஷ்குமார், புதுப்பட்டி ஒன்றிய குழு உறுப்பினரும் அதிமுக வடக்கு ஒன்றிய துணைச் செயலாளருமான இந்திராசெல்வராஜ் மற்றும் முக்கிய நிர்வாகிகள் அக்கட்சியில் இருந்து விலகி திண்டுக்கல் மேற்கு மாவட்ட செயலாளரும் உணவுத்துறை அமைச்சருமான சக்கரபாணி அவர்கள் முன்னிலையில் தங்களை திமுகவில் இணைத்துக் கொண்டனர்.