வீட்டுமனை அங்கீகாரத்துக்கு தடையில்லா சான்று  வழங்க ரூ 30ஆயிரம் லஞ்சம் வாங்கிய கோவில்பட்டி தாசில்தார் கைது? 


தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் ராஜாராம் என்பவரிடம் வீட்டுமனை அங்கீகாரத்துக்கு தடையில்லா சான்று  வழங்குவதற்காக ரூபாய் முப்பதாயிரம் லஞ்சம் வாங்கிய போது கோவில்பட்டி வட்டாட்சியர் வசந்த மல்லிகாவை லஞ்ச ஒழிப்பு பிரிவு டிஎஸ்பி பீட்டர் பால் தலைமையிலான போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.