நகராட்சி பள்ளி மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி - கோவில்பட்டி நகர் மன்ற தலைவர் பங்கேற்பு .

கோடை விடுமுறைக்கு பின்னர் தமிழகம் முழுவதும் கடந்த 12ஆம் தேதி 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டன.

இந்நிலையில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு இன்று முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு, தமிழக முழுவதும் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. 

இந்நிலையில்  கோவில்பட்டி காந்தி நகரில் செயல்பட்டு வரும் நகராட்சி துவக்கப்பள்ளியில் இன்று பள்ளிக்கு வந்த ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு பென்சில், பேனா, ஸ்கேல், ரப்பர் உள்ளிட்ட கல்வி உபகரணங்களை நகர் மன்ற தலைவர் கருணாநிதி வழங்கினார். மேலும் மாணவர்களுக்கு இனிப்பும் வழங்கப்பட்டது. இதில் நகராட்சி உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மாரிமுத்து, உதவி தலைமை ஆசிரியர் அப்பணசாமி, நகராட்சி துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியை உமா மகேஸ்வரி மற்றும் ஆசிரியர்கள் கண்ணன், கரிகாலன் ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.