விளாத்திகுளம் தொகுதியில் புதிய மதிமுக நிர்வாகிகள் தேர்வு: கட்சியினர் கொடியேற்றி இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட விளாத்திகுளம் மேற்கு ஒன்றியச் செயலாளராக ராஜசேகர் என்பவருக்கு கட்சியின் தலைமை சார்பில் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.இதைத்தொடர்ந்து விளாத்திகுளம் மேற்கு ஒன்றியச் செயலாளராக புதிதாக பொறுப்பேற்றுள்ள ராஜசேகர் தலைமையில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பலர்,விளாத்திகுளம் பகுதியில் அமைந்துள்ள மதிமுக கட்சியின் கொடிக்கம்பங்களில் கட்சிக்கொடியை ஏற்றி அங்கிருந்த பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர்‌.மேலும் புதிதாக பொறுப்பேற்றுள்ள ஒன்றியச்செயலாளர் மற்றும் கட்சி நிர்வாகிகள் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதியில் அதிகளவில் உறுப்பினர் சேர்க்கை நடந்த வேண்டும் என்றும், இப்பகுதியில் கட்சிப் பணிகள் தொய்வின்றி நடைபெறவேண்டும் என்றும் கட்சியினரிடம் அறிவுறுத்தியுள்ளனர்.