அமைச்சர் கே.என்.நேருவை மரியாதை நிமித்தமாக சந்தித்த மாநில நெசவாளர் அணி துணைச் செயலாளர் வசந்தம் A.C ஜெயக்குமார்!
தமிழ்நாட்டில் மாவட்ட வளர்ச்சி பணிகளை துரிதப்படுத்திடவும், அதேபோல் தமிழக வளர்ச்சித் திட்டங்களை மக்களுக்கும் பயனாளர்களுக்கும் நேரடியாக கொண்டு செல்ல உறுதி செய்வதற்கும், அதேபோல் பேரிடர் மற்றும் நோய் தொற்று காலங்களில் ஒருங்கிணைத்து மக்களுக்கு தேவையான வசதிகளை செய்து தருவதற்கும் மாவட்ட வாரியாக அமைச்சர்கள் நியமிக்கப்படுவது வழக்கம், அந்த வகையில் ஏற்கனவே பல்வேறு மாவட்டங்களுக்கு நியமன அமைச்சர்கள் நியமிக்கப்பட்ட நிலையில் தற்போது அமைச்சரவை மாற்றம் செய்யப்பட்ட தற்போதைய நிலையில், மாவட்ட வாரியாக அமைச்சர்களை நியமித்து தற்போது அந்த அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார், அந்த வகையில் திருநெல்வேலி மாவட்டத்திற்கு அமைச்சர் கே.என்.நேரு,தேனி மாவட்டத்திற்குஐ.பெரியசாமி, திருப்பத்தூர் கள்ளக்குறிச்சி மாவட்டங்களுக்கு எ. வ.வேலு, தருமபுரி மாவட்டத்திற்கு எம்.ஆர்.கே பன்னீர்செல்வம், தென்காசி மாவட்டத்திற்கு கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன், கன்னியாகுமரி மாவட்டத்திற்கு தங்கம்தென்னரசு, நீலகிரி மாவட்டத்திற்கு மு.பெ.சாமிநாதன், கோயம்புத்தூர் மாவட்டத்திற்கு செந்தில்பாலாஜி, கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு சக்கரபாணி, காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு ஆர்.காந்தி,பெரம்பலூர் மாவட்டத்திற்கு சிவசங்கர், நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மயிலாடுதுறை மாவட்டத்திற்கு மெய்யநாதன் ஆகியோரை பொறுப்பு அமைச்சர்களை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நியமனம் செய்து மக்கள் பணிகளை துரிதப்படுத்த உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில் திருநெல்வேலி மாவட்டத்திற்கு அரசின் வளர்ச்சிப் பணிகளை வளர்ச்சி துரிதப்படுத்த நியமிக்கப்பட்ட பொறுப்பு அமைச்சரும் தமிழக குடிநீர் வளங்கள் துறை மற்றும் நகராட்சி நிர்வாக அமைச்சருமான கே.என்.நேருவை திருச்சியில் அவரது இல்லத்தில், மாநில நெசவாளர் துணைச் செயலாளரும் பாளையங்கோட்டை சட்டமன்றத் தொகுதி பார்வையாளருமான வசந்தம் A.C ஜெயக்குமார் மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.