தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் கேசவன் நகர் பகுதியை சேர்ந்த  தம்பிரான் (75), தம்பிரான்  கோவில் பூசாரி ஆக வேலை செய்து வந்துள்ளார், இந்நிலையில் குடும்ப பிரச்சனை காரணமாக  கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டை விட்டு சென்றவர். வீடு திரும்பாத நிலையில்  23-02-2024 அன்று குடும்பத்தினர் விளாத்திகுளம்காவல் நிலையத்தில் தம்பிரானை காணவில்லை என புகார் அளித்திருந்த நிலையில்,01-03-2024 வெள்ளிக்கிழமை காலை 11 மணியளவில் விளாத்திகுளம் தீயணைப்புத்துறை அலுவலகம் அருகே காட்டுப்பகுதியில் மரம் ஒன்றில் தம்பிரான் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது, இதனை எடுத்து தம்பிரானின் உடலை மீட்ட விளாத்திகுளம் போலீசார், தம்பிரான் உடலை விளாத்திகுளம் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்து, வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.