விளாத்திகுளம் அருகே பள்ளி வளாகத்தில் 7ம் வகுப்பு மாணவன் உயிரிழப்பு.


தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள சிவஞானபுரம் - பொம்மையாபுரம் கிராமத்தை சேர்ந்த சுடலைமுத்து என்பவரின் மகன் மகேந்திரன் (12), மகேந்திரன் சிவஞானபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வந்துள்ளார், இந்நிலையில் வழக்கம் போல்  10-08-2024 சனிக்கிழமை பள்ளி வளாகத்தில் உள்ள நவாப்பழம் மரத்தில் சக மாணவர்கள், நவாப்பழம் பறித்து  சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது,  மகேந்திரனுக்கு சாப்பிட்ட நவாப்பழம் தொண்டையில் சிக்கி  மயக்கம் அடைந்து கீழே விழுந்துள்ளார், உடனே பள்ளியில் உள்ள ஆசிரியர்கள் மகேந்திரனை எப்போதும் வென்றான் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சிகிச்சைக்கி கொண்டு சென்றனர். ஆனால் கொண்டு செல்லும் வழியிலேயே  மாணவன் மகேந்திரன் பரிதாபமாக உயிரிழந்தார்.  பள்ளி வளாகத்தில் 7ம் வகுப்பு படிக்கும் மாணவன் நவாப்பழம்  சாப்பிடும் போது உயிரிழந்த சம்பவம்  அப்பகுதியில் பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து எப்போதும் வென்றான் காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.