திருச்செந்தூர் அருகே  கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 4 இளைஞர்கள் கைது.



திருச்செந்தூர் வால்விளை விளக்கு அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்த திருச்செந்தூர் கரம்பவிளை பகுதியை சேர்ந்த பாலகிருஷ்ணன் (19), நத்தகுளம் பகுதியை சேர்ந்த நாராயணன்(21), சதீஷ்குமார்(25), மாயாண்டி (19) ஆகிய நான்கு பேரையும் திருச்செந்தூர் காவல் நிலைய போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்த 210 கிராம் கஞ்சா  மற்றும் இரண்டு இரு சக்கர வாகனங்களை பறிமுதல் செய்து சிறையில் அடைத்தனர்.