சொகுசு காரில் 339 கிலோ புகையிலை பொருட்கள் கடத்திய 3 பேர் கைது.


தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு தேசிய நெடுஞ்சாலை சுங்கச்சாவடி அருகே கயத்தாறு போலீசார்  வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, அவ்வழியாக வந்த சொகுசு காரை நிறுத்தி சோதனை செய்த போது, அந்தக் காரில் 339 கிலோ புகையிலை பொருட்கள் இருந்தது தெரிய வந்தது, இதனை அடுத்து புகையிலைப் பொருட்களை கடத்தி வந்த திருநெல்வேலி நாரணமாள்புரம் பகுதியை சேர்ந்த மனோகர்(22), செந்தில்குமார்(27), முகேஷ்(32) ஆகிய 3 பேரையும் கயத்தாறு போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்த ரூபாய் 70 ஆயிரம் மதிப்புள்ள 339 கிலோ புகையிலை பொருட்கள் மற்றும் சொகுசு கார் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.