எட்டையாபுரம் அருகே மனைவி ஊருக்கு சென்றதால் கணவர் தூக்கிட்டு தற்கொலை.

 

தூத்துக்குடி மாவட்டம் எட்டையாபுரம் அருகே உள்ள ராமனுத்து சமத்துவபுரத்தை சேர்ந்த முத்தையா மகன் மந்திரமூர்த்தி (55), இவர் கூலி வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் இவரது மனைவி (-------) சில  நாட்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு சென்றதாக கூறப்படுகிறது. இதனால் விரக்தியில் இருந்து வந்த மந்திரமூர்த்தி  கடந்த 10 நாட்களாக தினமும் மது அருந்தி வந்ததாக கூறப்படுகிறது, இந்நிலையில் வீட்டில் தனியாக இருந்த மந்திரமூர்த்தி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மந்திரமூர்த்தியின் உடலை கைப்பற்றிய எட்டயபுரம் காவல் நிலைய போலீசார், இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.