தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள கரிசல்குளம் கிராமத்தை சேர்ந்த கணேசன் என்பவரின் மகள் பத்மபிரியா (25), பத்மபிரியா தூத்துக்குடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் வேலை பார்த்து வருகிறார், பத்மபிரியா காலை 6 மணி அளவில் கரிசல்குளத்தில் இருந்து குருவார்பட்டி வரை நடைப்பயிற்சி மேற்கொள்வதை வழக்கமாக வைத்துள்ளார்.இந்நிலையில் 19-02-2024 திங்கள் கிழமை காலை வழக்கம்போல் காலை 6 மணி அளவில் காதில் ஹெட்போன் மாட்டியபடி பாடல் கேட்ட வாரே நடைப்பயிற்சி மேற்கொண்டுள்ளார், அப்போது கருத்தையாபட்டி விளக்கு அருகே நடந்து சென்று கொண்டிருந்தபோது, இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர் ஒருவர், பத்மபிரியாவின் முகத்தில் மிளகாய் பொடி தூவி பத்மபிரியாவின் ரூ. 20000 மதிப்புள்ள செல்போனை பறித்து சென்றுள்ளார். இதுகுறித்து பத்மபிரியா  சங்கரலிங்கபுரம் காவல் நிலையத்தில் அளித்த புகாரியின் பேரில், சங்கரலிங்கபுரம் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.