தமிழக புகழ்பெற்ற தூத்துக்குடி மாவட்டம் எட்டையாபுரம் ஆட்டுச் சந்தை வாரம்தோறும் சனிக்கிழமை நடைபெறுவது வழக்கம், இந்த ஆட்டுச் சந்தைக்கு மதுரை, திருநெல்வேலி, தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வாரம்தோறும் சுமார் ஆயிரக்கணக்கான நாடுகள் விற்பனைக்கு கொண்டு வருவது வழக்கம், இந்த ஆட்டுச் சந்தையை வைத்து அரசுக்கு வாரந்தோறும் பெரிய அளவில் வருவாய் கிடைக்கிறது, ஆனால் இந்த ஆட்டுச் சந்தையில் குடிநீர் கழிப்பிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாததால் ஆடுகளை கொண்டுவரும் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் பெரிதும் சிரமப்பட்டு வருகின்றனர், எனவே எட்டயபுரம் பேரூராட்சி நிர்வாகம் எட்டையாபுரம் ஆட்டுச் சந்தைக்கு உரிய அடிப்படை வசதி செய்து தர வேண்டும் என்று எட்டையாபுரம் அதிமுக நகரச் செயலாளர் ராஜ்குமார் தலைமையில் முன்னாள் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பன் மற்றும் அதிமுகவினர் எட்டையாபுரம் பேரூராட்சி நிர்வாகத்திடம் மனு அளித்தனர், விரைவில் எட்டயபுரம் ஆட்டுச்சந்தைக்கு எட்டையாபுரம் பேரூராட்சி நிர்வாகம் உரிய அடிப்படை வசதி செய்து தரவில்லை என்றால் எட்டையாபுரம் பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து எட்டையாபுரத்தில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவோம் என்று விளாத்திகுளம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பன் தெரிவித்துள்ளார்.
அரசியல்
ஆட்டுச்சந்தையில் அடிப்படை வசதிகளை செய்து தர அதிமுகவினர் கோரிக்கை!
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
செல்வி ஜெ.ஜெயலலிதாவின் 76வது பிறந்தநாள் விழா கபடி போட்டி!
அடுத்த
மிளகாய் பொடி தூவி இளம் பெண்ணிடம் செல்போன் பறிப்பு !
இதையும் படிக்கலாம்
அமைச்சர் கே.என்.நேருவை மரியாதை நிமித்தமாக சந்தித்த மாநில நெசவாளர் அணி துணைச் செயலாளர் வசந்தம் A.C ஜெயக்குமார்!
09 Oct 2024
ஓலா, ஊபர் போன்ற ஆட்டோக்களை தடை செய்ய வலியுறுத்தி ஏ ஐ டி யூ சி ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்.
26 Aug 2024
அதிமுகவினரை கண்டித்து பாஜகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்.
26 Aug 2024
விளாத்திகுளத்தில் அதிமுகவினருக்கு உறுப்பினர் அட்டைகள் வழங்கிய முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ!
11 Aug 2024