கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் to திருவனந்தபுரம் சாலையில், அப்பகுதியை சேர்ந்த சோமி என்ற நபர் தனது எலக்ட்ரிக் இருசக்கர வாகனத்தை, ஆவின் உற்பத்தி மையம் அருகே சாலையின் ஓரமாக நிறுத்திவிட்டு  தனது நண்பரிடம் பேசிக் கொண்டிருந்தபோது, வாகனம் திடீரென மலமலவேன தீப்பிடித்து எறிந்தது, இதனை அடுத்து சோனி மற்றும் அக்கம் பக்கத்தினர் உடனடியாக தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இதனை அடுத்து மாவட்ட தீயணைப்பு துறை அதிகாரிகளுக்கு தகவல் அளித்ததின் பேரில், அங்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் தண்ணீர் பீச்சி அடித்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் வாகனம் முற்றிலும் எரிந்து நாசமானது, வாகனம் தீப்பிடித்து வெயிலின் தாக்கத்தினால் எறிந்ததா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்று வாகன உரிமையாளர் சோமி குழப்பத்தில் ஆழ்ந்தார்.