ராமநாதபுரம் மாவட்டம் பனையடினேந்தல் பகுதியை சேர்ந்த இருளன் என்பவரின் மகன் குருசாமி (34), இவர் தனியார் நிறுவனத்தில் பொறியாளராக வேலை செய்து வந்துள்ளார், குருசாமி வேலைப்பணி காரணமாக சாயல்குடியில் இருந்து இருசக்கர வாகனத்தில் ஓட்டப்பிடாரம் சென்று கொண்டிருந்தபோது, தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள கலைஞானபுரம் அருகே அரசு பேருந்து மீது இருசக்கர வாகனம் எதிர்பாராத விதமாக மோதிவிபத்துக்குள்ளானதில், குருசாமி படுகாயம் அடைந்தார், இதனை அடுத்து அக்கம் பக்கத்தினர் 108 மூலம்  தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு குருசாமியை சிகிச்சைக்காக கொண்டு சென்றபோது செல்லும் வழியிலே குருசாமி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து குளத்தூர் காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.