எட்டயபுரத்தில் ஆட்டோ - பைக் மோதி விபத்து : 2 பேர் பலி, 4 பேர் காயம்!

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தைச் சேர்ந்த மாரிமுத்து என்பவர் மனைவி அம்மாத்தாய்(73) என்பவருக்கு உடல்நிலை சரியில்லை என்பதால் ஆட்டோவில் அவரது உறவினர்கள் அம்மாத்தாயை கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றுள்ளனர். அப்போது ஆட்டோ எட்டயபுரம் பேரூராட்சி அலுவலகம் அருகே சென்று கொண்டிருந்தபோது, நந்தா(20) என்பவர் எட்டயபுரம் நோக்கி வந்த பைக் ஆட்டோ மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே ஆட்டோ டிரைவர் கண்ணன் (55), பைக்கில் வந்த நந்தா (20) இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் ஆட்டோவில் வந்த அம்மாத்தாய், காளை ஜோதி, கார்த்திகா, கார்த்திக் ஆகியோர் படுகாயமடைந்தனர். இதுகுறித்து தகவல் கிடைத்ததும் எட்டயபுரம் காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக எட்டையாபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும் விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து எட்டயபுரம் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.