495/500 : கல்வி மாவட்டத்திலேயே முதல் மதிப்பெண் பெற்று சாதித்துக்காட்டிய கூலித் தொழிலாளியின் மகள்!
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள தங்கம்மாள்புரம் கிராமத்தில் செயல்பட்டு வரும் இந்து கணபதி காசிநாதன் உயர்நிலைப் பள்ளியின் மாணவி அனுஸ்ரீ நாகவர்ஷா பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 500க்கு 495 மதிப்பெண்கள் பெற்று கோவில்பட்டி கல்வி மாவட்டத்திலேயே முதலிடமும், தூத்துக்குடி மாவட்ட அளவில் இரண்டாம் இடமும் பெற்று பள்ளிக்கும் தனது பெற்றோருக்கும் பெருமை சேர்த்துள்ளார். அதுமட்டுமின்றி, முதல் மதிப்பெண் பெற்று சாதித்து காட்டிய மனைவி அனுஸ்ரீ நாகவர்ஷாவின் தந்தை முருகன் தனியார் கம்பெனியில் கூலி வேலை செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தனது தந்தை படும் கஷ்டத்தை உணர்ந்து அவருக்குப் பெருமை சேர்க்கும் வேண்டும் என்று லட்சியத்துடன் படித்து அதிக மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றுள்ளேன் என்று பள்ளி மாணவி தெரிவித்துள்ளார். மேலும், தனக்கு ஊக்கப்படுத்தி கல்வி மாவட்டத்திலேயே முதல் மதிப்பெண் பெற வைத்த தனது பள்ளி நிர்வாகத்திற்கும், படங்கள் கற்பித்த ஆசிரியர்களுக்கும்... குறிப்பாக தனது பெற்றோருக்கும் நன்றியை தெரிவித்துக்கொண்டார் சாதனை மாணவி அனுஸ்ரீ நாகவர்ஷா.
கோவில்பட்டி மாவட்டத்தில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவி அனுஸ்ரீ நாகவர்ஷா-வின் மதிப்பெண்கள் விவரம்;
தமிழ் - 98/100
ஆங்கிலம் - 99/100
கணிதம் - 100/100
அறிவியல் - 98/100
சமூக அறிவியல் - 100/100
மொத்தம் = 495/500