தூத்துக்குடி
மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே உள்ள பாஞ்சாலங்குறிச்சி கிராமத்தில் அமைந்துள்ள
அருள்மிகு ஸ்ரீ வீரசக்கதேவி ஆலய 68 வது திருவிழாவை முன்னிட்டு மாபெரும்
மாட்டு வண்டிகள் பந்தயம் நடைபெற்றது, மூன்று பிரிவுகளாக நடைபெற்ற போட்டியில் நடு மாடு, சின்னமாடு, பூஞ்சிட்டு என 36 ஜோடி மாடுகள் இது
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து கலந்து கொண்டு சீறிப்பாய்ந்தன. இந்த
மாபெரும் மாட்டு வண்டிகள் பந்தயத்தை, பாஞ்சாலங்குறிச்சி வீரசக்கதேவி ஆலய குழுவினர் கொடி
அசைத்து தொடங்கி வைத்தனர். போட்டியில் வெற்றி பெற்ற மாட்டின் உரிமையாளர் மற்றும்
ஓட்டி வந்த சாரதிகளுக்கு விழா கமிட்டியின் சார்பாக பரிசுத்தொகை வழங்கி
கௌரவிக்கப்பட்டது. இதில் சிறப்பு விருந்தினராக தூத்துக்குடி வீர விளையாட்டு கழக
மாவட்ட செயலாளர் சண்முகபுரம்
மெடிக்கல்K.விஜயகுமார்
கலந்து கொண்டு சிறப்பித்தார்.
சிரிப்பாய் காளைகளை, நெடுந்தூரம் வரை சாலையின் இரு புறமும் நின்று ஆர்வமுடன் கண்டு களித்தனர். போட்டியில் வெற்றி பெற்றவர்களின் விவரம்,நடு மாடு வண்டி போட்டியில் 8மாட்டு வண்டிகளும், சின்ன மாட்டு வண்டி போட்டியில் 13 மாட்டு வண்டிகள் பூஞ்சிட்டு மாட்டு வண்டியில் 26-மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன. போட்டிகளை பாஞ்சாலங்குறிச்சி வீரசக்கதேவி ஆலய குழு தலைவர் முருகபூபதி அவர் தொடங்கி துவக்கி வைத்தார்.
8-மைல் தூரம் நடைபெற்ற நடுமாட்டு
வண்டி போட்டியில் முதல் பரிசை சிங்கிலி பட்டி ஆனந்த்,மாட்டு வண்டியும், 2-வது பரிசை
வேலங்குளம் எம் கண்ணன்,மாட்டு வண்டியும், 3-வது K.சண்முகபுரம் விஜயகுமார் மெடிக்கல், மாட்டு வண்டியும், 4 பரிசு
புதுக்கோட்டை மாவட்டம் பாண்டி பூவந்தி,மாட்டு வண்டியும் வெற்றி பெற்றது.
இதனை தொடர்ந்து
நடைபெற்ற 6-மைல் தூரம் சின்ன மாட்டு வண்டி போட்டியில் K சண்முகபுரம்
மெடிக்கல்,மாட்டுவண்டி முதலிடத்தையும், 2-வது
ராமநாதபுரம் மாவட்டம் காடமங்கலம் மொழிநிதி, 3-வது மதுரை மாவட்டம் விஷ்வா ராமச்சந்திரன் வண்டியும்
4வது K.சண்முகபுரம்
மெடிக்கல் மாட்டு வண்டியும் வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.